சாதிமத பேதம் வேண்டாம்!















கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை ,செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை என்றும் மான்புடன் வாழ்வோமடா.
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதந்த பூனை வை பேருக்கொரு நிறம் கண்டீர்
சாம்பல் நிறமொரு குட்டி,கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்று இதில் ஏற்றம் ஏதும் சொல்லலாமோ?
என்பது பாரதியார் பாடலாகும்.
நீங்கள் எப்படி பட்டவர்?யாருடனும் பழகமுன் அவர்கள் என்ன சாதி என்று பார்த்து பழகுபவரா? இல்லை,சாதி தெரியாமல் பழகிவிட்டோம் என்று அறிந்து அவர்கள் மனதை புண்படுத்தும் வழியில் இறங்குகின்றீர்களா?
இனி அவைகள் வேண்டாமே!
சாதி ஆண்டவானால் உருவாக்கப்பட்டதில்லை,அது மனிதனால் மனிதனுக்கு அவன் செய்யும் தொழில்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புனைப்பெயர்.பிராமணர்,வெள்ளாளர்,கொல்லர்,பறையர் என்று பலவகை.
ஒருவன் தன்னால் இயன்ற.தனக்கு பிடித்த ஒன்றை செய்தால்தானே அவனால் அதில் பாரிய வெற்றி காண முடியும்.அதை தேர்ந்தெடுத்து அந்த காலத்தில் இருந்த மனிதர்கள் செய்தார்கள்.அந்த தொழில் அடுத்த சந்ததியினருக்கு அவர்களின் பெற்றோரால் கற்பிக்கப்படுகிறது.இதில் சில பிள்ளைகள் வேறு தொழிகளில் நாட்டம் கொண்டால் அவர்கள் வேறு தொழில்களை செய்வதற்கான சந்தர்ப்பம் அங்கே உருவாகின்றது.ஆனால், சமூகம் அவனை அப்போது கூட அவன் பரம்பரை செய்து வந்த தொழிலை வைத்தே சாதியை வகுக்கிறது.
கீழ்ச்சாதியை சேர்ந்தவர்களுடன் மேல் சாதியை சேர்ந்தவர்கள் சேருவது இல்லை,அவர்களோடு திருமண ஒப்பந்தம் வைப்பதில்லை,அவர்களை சுபகாரியங்களுக்கு அழைப்பதில்லை,அப்படி அழைத்தாலும் அவர்களை சபையில் வைத்து சாப்பாடு கொடுக்காது-ஒதுக்குப்புறத்தில் ஓட்டை சிறட்டையில் தண்ணீரும்,உடைந்த பாத்திரத்தில் உணவும்.அவர்கள் மனிதர் இல்லையா?என்ன நாயா?அவர்களும் உங்களைப்போல ஆறறிவு படைத்தவர்கள்தானே.
காதல் என்பது இரண்டு மனதுகளின் சேர்க்கை,அந்த காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்.இவை அனைத்துமே பொய்.காதலிக்கமுன் கூட சாதியை கேட்டுத்தான் காதலிக்கிறது இந்த சமூகம்.
அவனுக்கும் மனது,உணர்ச்சி என்று ஒன்று இருக்குத்தானே?
இது எவ்வளவு சகோதரர்களின் மனதில் பிளவுகளை ஏற்படுத்துகின்றது.ஒரே இன,ஒரே நாட்டு மக்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
சிந்தியுங்கள்.நீங்களாவது வளர்ந்து வரும் உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து கூறி இந்த சாதி என்ற நஞ்சை ஒவ்வொரு மனிதனின் உடலிலும்,உள்ளங்களும் இருந்து அகற்றி,நடந்து கொண்டிருக்கின்ற இன்றைய உலகத்திற்கும்,பிறக்கப்போகும் நாளைய உலகத்திற்கும் நல்ல வழி அமைத்து,நம் சகோதரங்கள் அனைத்தும் ஒன்றாக கை கோர்த்து உலா வர செய்யுங்கள்.

No comments: