மனிதா.... நீ யார்?

இருபத்தோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்தாலும்
இன்னும் உன்
இதயத்தின்
இருள் நீங்கவில்லை.

பல்கலைகள் பயின்றாலும்-காசு
பணம் சேர்த்தாலும்- உன் மனதின்
பாலை வனம்
பூக்கவில்லை.

மணிக்கணக்கில்
மெனக்கட்டு
மன்னவன் செதுக்கி
மண்ணிற்கு அனுப்பிவைத்த உனக்கு

ஒன்றல்ல இரண்டல்ல
இணையற்ற ஆறறிவும்
இருந்தும் பயனென்ன?

ஜாதிமத பேதம் பார்த்து
ஜந்து போல
வாழத்தான்
ஜம்புலனும் ஆறறிவும்
வரம்
வாங்கி
வந்தாயோ?

வெள்ளையர்கள்
பேதம்பார்த்தால்
பொங்கி எழும் நீ மட்டும்
உன் இனத்தில்
பேதம் பார்த்து
உணர்வுகளை நசுக்கலாமா?

பண்டைக்கால சுயநலத்தால்
பிறந்ததுதான் ஜாதி மதம்
பகுத்தறிவு
படைத்த நீ அதை இன்னும்
பற்றி தொங்கலாமா?

பெரும்பேச்சு பேசினாலும்
பவுடர் பூச்சு பூசினாலும்
அமிர்தம்அல்ல
அழுக்கால்
ஆனதுதான் உன் உடம்பு

செங்குருதி,வெண்குருதி என்று
இயற்கை
பேதம் பார்க்கவில்லை
செருக்கோடு நீ மட்டுமேன்
பேதை போல் புலம்புகின்றாய்?

நான் பெரிதா ,நீ பெரிதா என்று
அடித்து தின்பது மிருக இயல்பு
மனிதனில் மனிதத்தை
மட்டும் மதிக்காமல்-நீ
மிதிப்பது சரி தானா?

இறந்தபின்பு இவ்வுலகில் - உன்
சாம்பல் கூட
மிஞ்சாது
இருக்கும் போதாவது - உன்
மனிதத்தை
எஞ்சவை

மனிதனுக்கு சிறந்தது
மனிதம் தான்
அது இல்லாதவன் பெயர்
மிருகம் தான்

எனவே ....
மனிதா ....
நீ யார் ...?

நீயே முடிவு செய்!!!!!

No comments: